ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் இந்தியாவையும் தாண்டி சிங்கப்பூர், சிகாகோ போன்ற நாடுகளில் இருக்கும் தமிழர்களிடமும் தீவிரம் அடைந்து வருகிறது.

முதல் முதலில் அமைதியான முறையில், ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்தார்.

மேலும் நேற்று தனது வீடு முன் அமர்ந்து அமைதி போராட்டத்தை தொடங்கினர் சிம்பு இதற்கு ஆதரவாக பல நடிகர்களும், ரசிகர்களும் இந்த போராட்டத்தில் பங்கு பெற்று உள்ளனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சிம்பு நேற்று முதல், தனது வீட்டில் வாசலிலேயே தான் உள்ளார், தூங்குவதற்கு கூட உள்ளே செல்லாமல் தனது வீட்டின் வாசலிலேயே தான் உறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைதி போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, வீர விளையாட்டுக்காக போராடி வரும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை ஒடுக்குவதற்காக ராணுவம் சென்னை வந்துள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது என்றும் ஒரு வேலை அவர்கள் தமிழர்கள் ஒருவர் மீதாவது கை வைத்தால் அது மிக பெரிய பாவம் என கூறினார் .

மேலும் அவர்களை காக்க வேண்டியது நமது கடமை என்றார், எனவே முதல் வேலையாக நாம் செய்ய வேண்டியது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவர்க்கும் தேசிய கொடி கொடுக்க வேண்டும், தேசிய கொடியை போத்தி கொண்டால் எப்படி அடிப்பார்கள் எனவே ராணுவமே வந்தாலும் எங்களுக்கு பயம் இல்லை நாங்கள் தமிழர்கள் என கூறியுள்ளார் சிம்பு.