இரண்டு மணிநேர மலையேற்றம்.. பாபாஜி குகையில் தியானம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - வைரலாகும் வீடியோ!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது இமயமலையை சுற்றியுள்ள பல இடங்களுக்கு சென்று தியானம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று பாபாஜி குகைக்கு சென்று அவர் தியானம் செய்துள்ளார். அந்த வீடியோ இப்பொது வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திரைப்பட வாழ்க்கையை மிக நேர்த்தியாக கையாண்டு வரும் அதே நேரத்தில், தனக்கென்று கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி அதில் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
ஆனால் பெருந்தொற்று காரணமாகவும், அவர்களுடைய உடல் நிலை சரியில்லாத காரணத்தினாலும் கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் இமயமலை பயணத்தை தவிர்த்து வந்தார். இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சூழலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து தனது இமயமலை பயணத்தை அண்மையில் துவங்கினார்.
முதலில் ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி அவர்களுடைய சமாதியில் சென்று வணங்கி அங்கிருந்து தனது பயணத்தை துவங்கிய அவர், இமயமலையில் உள்ள பல இடங்களுக்கு சென்று வருகிறார். குறிப்பாக இன்று சுமார் 2 மணி நேரம் மலையேற்றம் செய்து மகா அவதார் பாபாஜி குகையில் தியானம் செய்து தனது பயணத்தை துவங்கினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செல்லும் வழியில் அவருடைய ரசிகர்கள் காத்திருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து அவரோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது இமயமலை பயணத்தை முடித்து திரும்பிய பிறகு அவர் ஒப்பந்தமாகியுள்ள இரண்டு திரைப்படங்களில் நடிக்க துவங்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்பொழுது அவர் மகா அவதார் பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்து திரும்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
சுதந்திர தினம்.. சைலெண்டாக அப்டேட் கொடுத்த இயக்குனர் சங்கர் - வந்துவிட்டார் இந்தியன் தாத்தா!