Jai New Movie Worker Shoot Starts With Poojai : ஜெய் நடிப்பில் உருவாகும் ஒர்க்கர் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜெய் தற்போது ஒர்க்கர் என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ஜெய் உடன் இணைந்து யோகி பாபு, ரீஷ்மா நனையா ஆகியோர் பலரும் நடிக்கின்றனர். வினய் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசி லயா, வெங்கட் செங்குட்டுவன் ஆகியோர் நடிக்கிறார்கள். முழுக்க முழுக்க உண்மைக் கதையை மையப்படுத்திய படமாக இந்தப் படம் உருவாகிறது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

ஒர்க்கர் படத்தின் பூஜை இன்று படக்குழுவினர் கலந்துக் கொள்ள சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெய் மற்றும் நயன்தாரா ஆகியோரது நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பேபி அண்ட் பேபி படம் வெளியானது. இந்தப் படம் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. இந்தப் படத்தில் ஜெய் உடன் இணைந்து யோகி பாபுவும் நடித்திருந்தார். அதன் பிறகு உருவாகி வந்த கருப்பர் நகரம் தாமதமான நிலையில் ஜெய் 34 மற்றும் ஒர்க்கர் ஆகிய படங்களின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.