காதலருடன் ஊர் சுற்றுவது, லிப் லாக் போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் போடுவது, பட ஷூட்டிங்கில் இருந்து ஃபங்ஷன் வரை காதலன், காதலியுடன் சுற்றுவது இதெல்லாம் பாலிவுட்டிற்கு ஓ.கே. தென்னிந்திய திரையுலகில் எந்த நடிகர், நடிகைகளும் தங்களது காதல் குறித்து மூச்சுகூட விடுவதில்லை. லிவிங் டுகெதர் போல வாழ்ந்தால் கூட வெளியே தெரியாமல் பொத்தி பொத்தி பாதுகாப்பார்கள். ஒருகாலத்தில் சிம்பு, நயன்தாராவிற்கு பிறகு காதல் கி்சு, கிசுவில் சிக்கித் தவித்த ஜோடி ஜெய், அஞ்சலி. "எங்கேயும், எப்போதும்" படத்தில் நடித்த போது ஜெய்-அஞ்சலி இடையே காதல் ஏற்பட்டதாக வதந்திகள் பரவின. இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதாகவும், கெமிஸ்ட்ரி நல்லபடியாக வேலை செய்வதாகவும் கூறப்பட்டது.

காதல் விவகாரம் குறித்த கிசு,கிசுக்களை இருவருமே மறுக்காத நிலையில் பேட்டி ஒன்றில் நடிகர் ஜெய் அதனை உறுதிபடுத்தினார். இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதாகவும், எனக்கு அஞ்சலியையும், அஞ்சலிக்கு என்னையும் மிகவும் பிடித்துள்ளது எனக்கூறி அதிரடி கிளப்பினார். அந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் "பலூன்" படத்தில் ஒன்றாக நடித்தனர். கொடைக்கானலில் பட ஷூட்டிங் நடைபெற்ற போது அஞ்சலியும், ஜெய்யும் சேர்ந்து செய்த காரியத்தை அப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார் போட்டுடைத்துள்ளார். ஷுட்டிங்கின் போது 5 ஸ்டார் ஓட்டலில் ஜெய்க்கும், அஞ்சலிக்கும் இரண்டு அறைகள் போடப்பட்டதாகவும், ஆனால் ஜெய், அஞ்சலியுடன் ஒரே அறையில் தங்கியதாகவும் பகீர் கிளப்பியுள்ளார். சரி, இன்னொரு அறையை கேன்சல் செய்துவிடலாம் என்றால் அதற்கு ஜெய் சம்மதிக்கவில்லை என்றும், அதனால் தனக்கு ஏகப்பட்ட தொகை நஷ்டம் அடைந்ததாகவும் கதறியுள்ளார். 

இயக்குநர் அஞ்சலியின் பெயரை சொல்லி கூப்பிட்டதற்கு கோபப்பட்ட ஜெய் கோபப்பட்டதாகவும், அஞ்சலிக்கு வயிற்று வலி எனக்கூறி சென்னை கிளம்பிவிட்டதாகவும் அடுத்தடுத்து அதிரடியான தகவல்களை வெளியிட்டுள்ளார். மைண்ட் வாய்ஸ் என நினைத்து தயாரிப்பாளர் நந்தகுமார் பேசிய தகவல்கள், ஜெய், அஞ்சலியின் லீலைகளை காட்டிக் கொடுத்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் ஒரே பேச்சு.