jai birthday anjali wishes
தனி ஹீரோவாக ஒரு வெற்றி படத்தையாவது கொடுக்க வேண்டும் என போராடி வருபவர் நடிகர் ஜெய்.இவர் தற்போது அஞ்சலி - ஜனனி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் பலூன் படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

பலூன் படத்திற்கு பிறகு தன்னுடைய வர்த்தக அந்தஸ்து உயரும் என்ற நம்பிக்கையோடு இருக்கும் ஜெய், தனது பிறந்த நாளை, நேற்று பலூன் படக்குழுவினரோடு கொண்டாடினார்.

மேலும் ஜெய் மற்றும் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, பலூன் படத்தின் கதாநாயகி அஞ்சலி இந்த விழாவில் கலந்து கொண்டு ஜெய்யை வாழ்த்தினார். அவருடைய வருகையை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெய்க்கு ஆச்சரியம் கொடுக்கும் வகையில் பிறந்த நாள் கேக்கை, ஹெலிகேம் எனப்படும் பறக்கும் கேமராவில் கொண்டு வந்தார் அஞ்சலி. படக்குழுவினர் அனைவரும் ஜெய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

மேலும் ஜெய் அஞ்சலி இருவரும் காதலித்து வருவதாக கூறி வரும் நிலையில் இதுபோன்ற செயல்களில் அஞ்சலி ஈடுபடுவது அவர்களது காதலை உறுதி படுத்தும் விதமாக இருக்கிறது என கூறப்படுகிறது.
