நடிகர் ஜெய் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் அஞ்சலி மற்றும் ஜெய் காதலை உறுதி படுத்துவது போல் அமைந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுவரை தங்களுடைய காதலை வெளிப்படையாக காட்டிக்கொள்ளாமல் இருந்த ஜெய், அஞ்சலி முதல்முறையாக தங்களுடைய காதலை தோசை மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

நேற்று முன் தினம் ஜோதிகா நடித்த மகளிர் மட்டும் தோசை ப்ரோமோஷன் என்ற வித்தியாசமான ப்ரோமோஷன்களால் பல பிரபலங்கள் தங்களது மனைவி, மற்றும்குழந்தைகளுக்கு தோசை சுட்டு கொடுத்து அசத்தினர். 

அந்த வகையில் நேற்று ஜெய் தனது வீட்டில் லிவிங் டு கெதரில் வசிக்கும் அஞ்சலிக்கு தோசை சுட்டுக்கொடுத்துள்ளார் . அதை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தங்களுக்கான உறவு எப்படி என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளனர். 

இதன் மூலம் ஜெய், அஞ்சலி மிக விரைவில் திருமணத்தில் இணையப்போவது உறுதி என்று தெரியவந்துள்ளது.