Asianet News TamilAsianet News Tamil

சில மணி நேரத்திற்குள் 4 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்ட 'ஜகமே தந்திரம்' ட்ரைலர்! தெறிக்கவிடும் சாதனை..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன்  உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடியில்  மொத்தம் 17 மொழிகளில் ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர், இன்று  காலை வெளியான நிலையில் 24 மணி நேரத்திற்கு முன்பாகவே, சுமார் 4 மில்லியன் ரசிகர்களுக்கு மேல் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.
 
jagamea thanthiram cross 4 million views within 24 hours
Author
Chennai, First Published Jun 1, 2021, 7:37 PM IST

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன்  உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடியில்  மொத்தம் 17 மொழிகளில் ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர், இன்று  காலை வெளியான நிலையில் 24 மணி நேரத்திற்கு முன்பாகவே, சுமார் 4 மில்லியன் ரசிகர்களுக்கு மேல் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.

'ஜகமே தந்திரம்' படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று விட்டதால்,   இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. மேலும் பிப்ரவரி மாதம் இந்த படத்தின் ட்ரைலர் ரிலீசாகும் போதே ரசிகர்கள் மத்தியிலும், நெட்டிசன்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரைலரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

jagamea thanthiram cross 4 million views within 24 hours

ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ட்ரைலரின் ஒவ்வொரு காட்சிகளிலும், அதிரடி காட்சிகளும், பச் வசனங்களும் தூள் பறக்கிறது. அதே போல், இதுவரை பார்த்திடாத தனுஷையும் கண் முன் நிறுத்தியுள்ளார் கார்த்தி சுப்புராஜ். இந்த ட்ரைலர் தற்போது வேற லெவலில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை செய்துள்ளது.

குறிப்பாக தப்பு பண்றோம் அவ்வளவு தான்.  சின்ன தப்பு, பெரிய தப்பு எல்லாம் கிடையாது’ என்ற வசனமும் ’சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ என்று தனுஷ் கெத்தாக பேசும் வசனமும் போன்ற தனித்துவமான வசனங்களுக்கு கிடைத்த வரவேற்பாகவே இது பார்க்கப்படுகிறது.

jagamea thanthiram cross 4 million views within 24 hours

 கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.  ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios