தமிழ் சினிமாவின் டாப் நடிகரான தல அஜித்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சினிமாத்துறையிலும் செல்வாக்கு மிக்க நபராக வலம் வருகிறார். மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல் அஜித்தை நெருங்குவது மிகவும் சுலபம். திரையுலகினரிடம் மிகவும் அன்பாக மதித்து பேசக்கூடிய நபர், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் திரைப்பிரபலங்கள் பலரும் அவருடைய பெயரை வைத்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக அவருடைய காதுகளுக்கு செய்தி எட்டியது. 

 

இதையும் படிங்க: படுமோசமான உடையில் பயங்கர கவர்ச்சி காட்டிய பூனம் பஜ்வா... மிரண்டு போன ரசிகர்கள்...!

இதையடுத்து விழித்துக்கொண்ட அஜித் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தன்னுடன் பல வருடங்களாக பணியாற்றிய வரும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற மக்கள் பிரதிநிதி என்றும், அவர் மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும்‌ தன்னுடைய பெயரை பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரையேனும்‌ அணுகினால்‌ அந்த தகவலை  சுரேஷ்‌ சந்திரா அவர்களிடம்‌ உடனடியாக தெரிவிக்க வேண்டும்‌ என்றும்‌ வேண்டுகோள் விடுத்திருந்தார். 

 

இதையும் படிங்க: “அஜித் வீட்டில் இருந்தே வருத்தப்பட்டுக் கொள்ளட்டும்”... செய்தியாளர்கள் சந்திப்பில் கொந்தளித்த எஸ்.பி.பி.சரண்!

தற்போது உலக அளவில் லட்சக்கணக்கிலான ரசிகர்களைக் கொண்ட அதிரடி நாயகன் ஜாக்கி சானுக்கும் அதேபோல் ஒரு அனுபவம் கிடைத்துள்ளது. அதனால் விழித்துக்கொண்ட அவரும் அஜித் பாணியிலேயே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜேசி குரூப் இண்டர்நேஷனல் என்பது ஜாக்கி சான் தனித்து நிர்வாகிக்கும் நிறுவனம். எங்களது நடிகரின் சேவை வேண்டுமென்று எண்ணுபவர்கள் இ-மெயில் மூலமாக அந்த நிறுவனத்தை நேரடியாக அணுகலாம். எங்கள் நிறுவன உறுப்பினர் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொள்வார். எங்கள் நடிகர் பெயரைக்கூறிக்கொண்டு வருபவர்கள் மீது உங்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக எங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். எங்கள் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்துவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.