ஹாலிவுட் திரையுலகின் ஆக்‌ஷன் கிங்காக வலம் வருபவர் ஜாக்கி சான். இவருடைய ஆக்‌ஷன் ப்ளஸ் காமெடி கலந்த படங்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஜாக்கி சானுக்கு பெய்கிங்கின் டோங்ஜிமன் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் சொகுசு அப்பார்ட்மெண்ட் ஒன்று உள்ளது. 13 ஆயிரம் அடிகள் கொண்ட அந்த வீட்டில் 6 படுக்கையறைகள் உள்ளன. அந்த வீட்டில் ஜாக்கி சான் தனது குடும்பத்துடன் 2017ம் ஆண்டு முதலே வசித்து வருகிறார்.

இதை அவர் யுஜியா என்ற நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளார். அந்நிறுவனத்திற்கு விளம்பர உதவிகளை செய்ததற்காக ஜாக்கிசானுக்கு குறிப்பிட்ட தொகைக்கு அவர்கள் வீட்டை விற்பனை செய்துள்ளனர். அந்த நிறுவனத்திடம் ஜாக்கி சான் முறையாக பத்திரப்பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் யுஜியா நிறுவனத்திற்கும், மற்றொரு நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை கோர்ட் வரை சென்றுள்ளது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் யுஜியா நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்து விற்க உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து யுஜியாவின் சொத்துக்கள் வரும் 30ம் தேதி ஏலம் விடப்படுகின்றன. அதில் ஜாக்கி சான் தங்கியுள்ள அப்பார்ட்மெண்டும் அடக்கம். உலக அளவில் புகழ்பெற்ற நடிகரான ஜாக்கி சானின் வீடு ஏலம் விடப்படுவது அவருடைய ரசிகர்களை மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.