டபுள்,ட்ரிபிள் மீனிங் வசனங்களுடன் தமிழக வாலிப வயோதிக அன்பர்களை பெரும் ட்ரபுளுக்கு உள்ளாக்கிய ‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படங்களின் வரிசையில் அதே பலான பலான சமாச்சாரங்களுடன் இந்த வெள்ளியன்று திரைக்கு வருகிறது ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’.

விமல், ஆஸ்னா சவேரியுடன் இப்படத்தில் ஒரு புத்தம் புதிய கவர்ச்சி பாம் அறிமுகமாகவிருக்கிறார். பெயர் மியா ராய். ஒரு உறவுமுறையில் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் சகோதரியாம். ஐரோப்பிய பட உலகில் ஆபாச பட நாயகிகளில் முதல் பெயர் இவருடையதுதானாம். அந்தப் பெயரைக் காப்பாற்றும்விதமாக இந்தப் படத்தில் கவர்ச்சியை வாரி வழங்கி உள்ளாராம் மியா ராய் லியோன்.

படம் சென்சாருக்குப் போகும்போது ஆண்டவா எப்பிடியாவது இந்தப் படத்துக்கு ‘ஏ’ சர்டிபிகேட் வாங்கிக் குடுத்துடு’ என்று தயாரிப்பாளரும், இயக்குநரும் இருக்கிற அத்தனை தெய்வங்களையும் வேண்டிக்கொள்ள அவர்கள் விரும்பியபடியே படத்துக்கு ‘ஏ’ சர்டிபிகேட்டே கிடைத்திருக்கிறது.

தெலுங்கில் ‘குண்டூர் டாக்கீஸ்’ என்ற பெயரில் வெளியான படத்தின் ரீமேக் தான் இப்படம் என்பதை ஏனோ படக்குழுவினர் ரகஸியமாக வைத்திருக்கிறார்கள். அப்படத்தில் கதாநாயகியின் அக்காவுடன் ஹீரோ கள்ள உறவு வைத்திருப்பார்.