'கனா' படத்தை நடித்து தயாரித்திருந்த,  நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தொடர்ந்து நடிப்பிலும், தயாரிப்பிலும் சேர்ந்து கலக்கி வருகிறார். 

இவர் நடிப்பில் உருவாகி வரும் 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் மே 1ம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன்  படத்திலும் நடித்து வருகிறார். 

மேலும்,  'இரும்புத்திரை' பட இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் உள்ளார். இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கும் நிலையில், அர்ஜுன் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த படத்தில், இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'நாச்சியார் படத்தில், ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்த, இவானா, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு, வரும் மார்ச் மாதம் தொடங்கும் என திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.