கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிகில் திரைப்படம் 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டதாக படத்தின் தயாரிப்பாளரான கல்பாத்தி அகோரத்தின் மகள் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் போட்ட ட்வீட் டிரெண்டானது. அதனை ஒட்டி பிகில் படத்தில் மொத்த வசூல் 300 கோடி ரூபாய் என்று சில தகவல்கள் வெளிளயாகின. இது உண்மையா என்று ரசிகர்கள் அர்ச்சனாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க, உண்மையில் பிகில் தான் கடந்த வருடத்தின் அதிகம் வசூலித்த படம் என்று  அவர் பதில் அளித்திருந்தார். இதனை அடுத்து அர்ச்சனாவே, படம் 300 கோடி வசூல் என்று கூறிவிட்டதாக விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் தம்பட்டம் அடித்தனர். பிறகு இந்த விஷயம் சில செய்தித்தாள்களிலும் வெளியானது. இந்த நிலையில் ஏஜிஎஸ் குழுமம் தாக்கல் செய்த வரவு செலவு கணக்கில் பிகில் 300 கோடி என்கிற வசூல் குறிப்பிடத்தக்க அளவில் குறிப்பிடப்படவில்லை என்று சொல்கிறார்கள். இதனை அடுத்தே ஏஜிஎஸ் குழுமம் தொடர்புடைய 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் களம் இறங்கினர்.

அப்போது கல்பாத்தி அகோரத்தின் வீட்டில் நடைபெற்ற ரெய்டின் போது டைரி ஒன்று சிக்கியது. அதில் நடிகர் விஜய்க்கு கொடுக்கப்பட்ட சம்பளம் என்று கூறி பெருந்தொகை குறிப்பிடப்பட்டிருந்ததாக சொல்கிறார்கள். இதனை அடுத்து விஜய் தாக்கல் செய்த வரவு செலவு கணக்கை பார்த்த போது அங்கும் இடித்துள்ளது. இதனை அடுத்தே விஜய் எங்கு இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கு விரைந்தது வருமான வரித்துறை. ஆனால் தனக்கு எதுவும் தெரியாது, எல்லாம் தன் அப்பா தான் டீல் செய்வதாக விஜய் கூறியுள்ளார்.

இதனை அடுத்து அப்படியா அப்போ வாங்க சென்னைக்கு போகலாம் என்று விஜயை கையோடு அழைத்து வந்து சென்னையில் வைத்து கொத்து பரோட்டோ போட்டுள்ளனர். எவ்வளவோ விளக்கம் அளித்தும் கல்பாத்தி அ கோரம் சம்பளமாக கொடுத்த பணத்திற்கான கணக்கை மட்டும் விஜய் தரப்பால் காட்ட முடியவில்லை என்கிறார்கள். இதனால் அடுத்த கட்ட விசாரணைக்கு விஜய் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏறப்ட்டுள்ளது.