"பிகில்" பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடுகளில் 24 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஏன் விசாரணைக்காக நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யையும் அலேக்காக சென்னை தூக்கி வந்தனர். அவரிடமும், அவரது மனைவியிடமும் விஜய்யின் சம்பளம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் விஜய் வீட்டில் ரெய்டு நடைபெற்றதற்கான அதிரடி காரணம் தற்போது வெளியாகியுள்ளது.  கடந்த நவம்பர் மாதம், ஜேப்பியார் குழுமத்திற்கு உள்பட்ட 32 இங்களில் கடந்த 7-ஆம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்கள் இரவு, பகலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனைகளில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அப்போது கசிந்தன. ரூ.1200 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் காட்டப்படாத பல நூறு கோடிகள் ரொக்கம், கணக்கில் காட்டப்படாத ரூ.350 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க – வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த ரெய்டில் மதமாற்ற கும்பல்கள் வெளிநாட்டு பணத்தை ஜேப்பியார் கல்வி குழுமத்திற்கு சொந்தமான அறக்கட்டளைகள் மூலமாக முறைகேடாக கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படி மதமாற்றத்தில் ஈடுபடும் கும்பல்களின் பின்னணியில் சினிமாத்துறையைச் சேர்ந்த பலரும் இருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. 

சினிமாத்துறையைச் சேர்ந்த நடிகர் விஜய், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இயக்குநர் அட்லி ஆகியோரை, ஜேப்பியாரின் இரண்டாவது மகளான ரெஜினா பின்புலத்தில் இருந்து இயக்கி வருவதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் தான் பண்ணை வீட்டில் வைத்து விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய, விடிய டீல் பேசியுள்ளனர். அதாவது ரெஜினா குரூப்புடன் விஜய் வைத்துள்ள தொடர்பை உடனடியாக துண்டிக்க வேண்டும் என்றும், கிறிஸ்துவ மிஷனரிகள் மூலமாக வெளிநாடுகளில் இருந்து கோடி, கோடியாய் பணம் கைமாறுவதால் நீங்கள் மதமாற்றத்திற்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்றும் ஸ்டிரிக்ட் ஆர்டர் போட்டுள்ளனர். 


மேலும் விஜய் இதுவரை 1200 கோடிக்கும் மேல் சொத்து சேர்ந்துள்ளதாக, அதற்கான ஆவணங்களை காட்டியுள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள். இதனால் கொஞ்சம் ஜர்க் அடித்த விஜய், தற்போதைக்கு வருமான வரித்துறையின் டீலிங்கிற்கு ஓ.கே. சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.