என் வாழ்நாளில் நான் கண்ட அற்புதமான நடிகர் விஜய் சேதுபதி என பாலிவுட் நடிகர் ஷாருக்கான்  விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளியுள்ளார்

 ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரில் இந்திய திரைப்பட விழா நடைபெற்று வருகிறது கடந்த ஆகஸ்டு 8ஆம் தேதி தொடங்கிய அந்த விழா ஆகஸ்டு 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது 

அதில் இந்தியாவின் முக்கிய முன்னணி  கதாநாயகர்கள் கதாநாயகிகள் கலந்து கொண்டுள்ளனர் குறிப்பாக ஷாருக்கான் , கரண் ஜோஹர், தபு, காயத்ரி , அர்ஜுன் கபூர்,  விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் அதில் கலந்து  கொண்டுள்ளனர். 

இந்நிலையில் நேற்று நடந்த விழா மேடையில் பேசிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான்,  விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ்  திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு அசாத்தியமானது என்றார், எதார்த்தமான நடிகர் விஜய் சேதுபதி என வெகுவாக பாராட்டி பேசிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 

விஜய் சேதுபதியை கட்டியணைத்து என் வாழ்நாளில் நான் கண்ட சிறந்த மனிதர்  அற்புதமான நடிகர் நீங்கள் என்று விஜய் சேதுபதியை பாராட்டியுள்ளார் 


பாலிவுட் நடிகர்  ஷாருக்கான் விஜய் சேதுபதியை பாராட்டியிருப்பது விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.