அம்பேத்கரை ஒரு சாதிய குறியீடாக ஆக்கியதே இயக்குநர் பா.ரஞ்சித் போன்றவர்கள் தான் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதுறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வந்த இயக்குநர் பா.ரஞ்சித், தனது ட்விட்டர் பக்கத்தில், ’’அண்ணலுக்கு எதிரி சித்தாந்தம் தான் மனிதர்கள் அல்ல. மனித பேரினத்தின் மீதுமகத்தான அன்பை செலுத்தியவர். சிலை உடைத்த சாதி மனநோயினை தீர்க்கவல்ல மகத்தான மருத்துவர் அவர். அசமத்துவத்தை எதிர்த்து சமத்துவத்திற்க்கான பாதையை உண்டாக்கியவர். வா சகோதரா!சரி செய்து கொள்(வோம்)’’ எனத் தெரிவித்துள்ளார். இதற்கு கருத்து தெரிவித்துள்ள சிலர், அம்பேத்கரை ஒரு சாதிய குறியீடாக ஆக்கியதே இயக்குநர் பா.ரஞ்சித் போன்றவர்கள் தான்’ எனத் தெரிவித்துள்ளனர்.

 

’’ஒரு சமூகத்திற்கான தலைவர் அல்ல அண்ணல். ஒடுக்கபட்ட, ஒடுக்கபட்டு கொண்டிருக்கும், ஒடுக்கபடபோகின்ற ஒவ்வொரும் அறிய வேண்டும் இவரை பற்றி பா.ரஞ்சித் அவர்களே சரிசெய்துகொள் என்றால் நீங்களும் சரி செய்துகொள்ள தான் வேண்டும். எப்போது அம்பேத்கரை திருமாமாவளவன், பா.ரஞ்சித் தூக்க ஆரம்பித்தார்களோ அன்றே அவர் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது’’ என ஒருவர் பதிவிட்டுள்ளார். 

 

’’தமிழ்நாட்டில் காந்தி உட்பட ஒரு மனித சிலையும் இருக்கக்கூடாது, மொத்தமாக துப்புறவு செய்யும் காலம் நெறுங்கிவிட்டது.  வேதாரணியம் *பாபாசாகேப்* அம்பேத்கர் ஐயா சிலையை உடைத்த லெனின் என்ற கிறித்தவ மதம் மாறிய முன்னால் தலித் நபர் கைது. இதன்மூலமாக யோசித்தால் காரணம் மதமாற்றம் தான் வேறென்ன?’’ என பதிவிட்டு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.