தொடர்ந்து, விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்திவரும் அவர், அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கும் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் 4 ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார்.

சமீபத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான மிஸ் மேட்ச் தெலுங்கு படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து, சிவா நிர்வாணா இயக்கத்தில் நானி நடிக்கும் புதிய திரைப்படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அவர், தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

இதுதவிர, துருவ நட்சத்திரம்,  க/பெ ரணசிங்கம் என விக்ரம், விஜய்சேதுபதி உள்ளிட்டோருடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள படங்கள், அடுத்தடுத்து ரிலீசுக்கு ரெடியாக வருகின்றன. 

இப்படி, தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், புதிதாக ஃபோட்டே ஷுட் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது பிரபல பத்திரிகைக்காக ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தியுள்ளார். 

அவரது இந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதற்கு காரணம், ஹோம்லியிலிருந்து செக்ஸி கேர்ளாக ஐஸ்வர்யா ராஜேஷ் அவதாரம் எடுத்திருப்பதுதான். 

அவரது ஹாட் புகைப்படங்களைக் கண்டு இதயத்தை பறிகொடுத்த ரசிகர்கள், ஐஸ்வர்யா ராஜேஷ் என்ற பெயரிலேயே ஹேஷ் டேக்கை உருவாக்கி அந்த புகைப்படங்களை. பகிர்ந்து இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்து கொண்டாடி தீர்த்துவிட்டனர். 

அத்துடன், கண்கவர் மாடர்ன் ஆடைகளில், செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும்  ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளையும் குவித்து வருகின்றன.