அதன்பின்னர், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வந்தாலும், 'அகில உலக சூப்பர் ஸ்டார்' சிவாவுக்கு ஜோடியாக நடித்த 'தமிழ்ப்படம்-2' படம்தான், ஐஸ்வர்யா மேனனை ஹீரோயினாக ரசிகர்களிடம் கொண்டு சென்றது.


அதன்பின் ஓராண்டுக்கு மேல் படவாய்ப்புகள் இன்றி இருந்த அவர், தற்போது 'ஹிப்ஹாப் தமிழா' ஆதியின் 'நான் சிரித்தால்' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இயக்குநர் சுந்தர் சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ராணா இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு, ஹீரோ 'ஹிப்ஹாப் தமிழா' ஆதியே இசையமைத்துள்ளர். 

தற்போது, 'நான் சிரித்தால்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.இந்த நிலையில், கடந்த டிசம்பர் 2ம் தேதி ஐஸ்வர்யா மேனனின் கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை தொடர்ந்து, தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்கான 'ப்ரேக்-அப்' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 


அதேநாளில், ஹீரோயின் ஐஸ்வர்யா மேனனின் அசரடிக்கும் கவர்ச்சி புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 'ப்ரேக்-அப்' பாடல் சிங்கிள் ரிலீஸ் என்ற கேப்சனுடன் இந்த புகைப்படங்களை ஐஸ்வர்யா மேனன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 
ஒருபக்கம் 'நான் சிரித்தால்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்கான 'ப்ரேக் அப்' பாடல் ரசிகர்களின் செவிகளுக்கு ட்ரீட்டாகவும், மறுபக்கம், ஹீரோயின் ஐஸ்வர்யா மேனனின் கவர்ச்சி புகைப்படங்கள் கண்களுக்கு விருந்தும் படைத்து வருகின்றன.