ஹரிஷ் கல்யாண் நடிப்பில், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தல் சாம் சி.எஸ். இசையில் வெளியான படம் "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்". 

இந்தப் படத்திற்காக ராக் ஸ்டார் அனிருத் பாடிய 'கண்ணம்மா' பாடல், ரசிகர்களை கிறங்கடித்ததுடன் இளைஞர்களின் காலர் ட்யூனாகவும் மாறியது. இந்தப் பாடலின் சூப்பர் ஹிட்டுக்குப்பிறகு, மீண்டும் ஹரீஸ் கல்யாணுக்காக அனிருத் இணைந்துள்ளார். 

"இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்" படத்தை தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'தனுசு ராசி நேயர்களே'. இந்த படத்தின் மூலம், இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குநராக அறிமுகமாகிறார். 

இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக இருந்தவர். ரொமாண்டிக் காமெடி கதையுடன் உருவாகும் இந்தப் படத்தில், 'பிகில்' படத்தில் முக்கிய ரோலில் நடித்த ரெபா மோனிகா ஜான் மற்றும் ரியா சக்கரவர்த்தி என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் இடம் பெறும் பெப்பியான பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். இது, ஹீரோ ஹரீஷ் கல்யாணின் இண்ட்ரோ பாடலாக அமைக்கப்பட்டுள்ளதாம். 

ஜிப்ரானின் துள்ளலான இசையில் அனிருத் பாடியிருக்கும் இந்தப் பாடலை, முதல் சிங்கிள் ட்ராக்காக அடுத்த வாரம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கண்ணம்மா பாடலைப் போன்று இந்த பாடலும் ரசிகர்களை கவரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 குடும்பத்துடன் கண்டு ரசிக்கும்படி ஜனரஞ்சகமன படமாக உருவாகிவரும் 'தனுசு ராசி நேயர்களே' படத்தை, வரும் நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.