தற்போதய இளைஞர்கள் மத்தியில் ஆன்லைன் விளையாட்டு மோகம் அதிகமாகவே காணப்படுகிறது. அப்படி பட்ட இளைஞர்கள் மனநிலையை மாற்றி மரணம் வரை கொண்டு போகும் விளையாட்டு தான் "ப்ளூ வேல்" இதனை தற்கொலை விளையாட்டு (Sucide Game ) என்றும் கூறுகின்றனர்.

இந்த விளையாட்டால் ஏற்கனவே கேரளா, துபாய், சீனா, பாகிஸ்தான், ரஷ்யா  மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த விளையாட்டை விளையாடியதால் தான் இறந்தார்கள் என்பதற்கு ஆதாரமாக இறந்தவர்கள் அனைவர் கைகள் அல்லது கால்களில் கூர்மையான ஆயுதம் கொண்டு சுறாவின் படம் வரையப்பட்டிருந்தது.

தற்போது இந்த விளையாட்டை விளையாடியதால் தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலநடிகையாக வளர்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் நண்பர் கேரளாவில் இறந்துள்ளார். இந்த தகவலை அறிந்ததும் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவருடைய சகோதரர் இருவரும் கேரளா விரைந்துள்ளதாக தெரிகிறது. 

ஐஸ்வர்யா ராஜேஷின் சிறு வயது நண்பரான இவர் இறந்துள்ளதால் ஐஸ்வர்யா  மிகவும் துக்கத்தில் இருப்பதாக அவருடைய  தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.