ishwarya rai father admited the hospital
நடிகையும், நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியுமான உலக அழகி ஐஸ்வர்யா ராய்யின் தந்தை கிருஷ்ணாராஜ் ராய் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.
இவரது உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இவரை பார்த்து கொள்வதற்காக ஐஸ்வர்யா ராய் குடுபத்தினர் அனைவரும் மருத்துவ மனையிலேயே இருக்கின்றனர். மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் அவரது உடல் நலம் விசாரித்தது மட்டும் இன்றி இரவு முழுவதும் அங்கேயே இருந்ததாக கூறப்படுகிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வளம் வரும், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன் போன்றோர் மருத்துவமனையில் இருந்து கிருஷ்ணராஜ் ராய்யை கவனித்து வருவதால், இவர்களை பார்க்க ரசிகர்கள் மருத்துவமனை முன் குவிந்துள்ளனர்.
