பாலிவுட் திரையுலத்தை தாண்டி, தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவருக்கு திருமணம் ஆகி குழந்தையே இருந்தாலும் இன்று வரை இவரை கதாநாயகியாக நடிக்க வைக்க பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார்.

அந்த விழாவில் இந்திய தேசிய கொடியை நடிகை ஐஸ்வர்யா ஏற்றினார். அப்போது லோ கட் நெக் வைத்த ஆடை அணிந்திருந்ததால் தர்மசங்கடங்களுக்கு ஆளாகி தன்னுடைய ரசிகர்களுடன் புகை படம் எடுத்துக்கொள்ளும் போதும், அங்கிருப்பவர்களுடன் உரையாடும்போது தனது கை மற்றும் துப்பட்டாவை வைத்து கழுத்தினை மறைத்துக்கொண்டு இருந்தார்.

மேலும் அங்கு ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டியளிக்கும்போது நெஞ்சில் தனது கையை வைத்து மறைத்தபடியே நின்றிருந்தார்.

மெல்போர்னில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய முதல் இந்திய நடிகை என்று ஐஸ்வர்யா ராய் பெருமை பட வேண்டிய நேரத்தில்  ஆடை விலகிவிடுமோ என்கிற ஒருவித பயத்துடன் இவர் கழுத்தை பிடித்தபடி கூனி குறுகி  நின்றது பார்ப்பவர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது.