ishwarya rai and fans
முன்னாள் உலக அழகி, நடிகை, அபிஷேக் பச்சனின் மனைவி என்று பல அந்தஸ்துகளுக்கு உரிய ஐஸ்வர்யாராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் தெரிவித்து வருகின்றனர்.
மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ணராஜ் ராயை ஐஸ்வர்யாராய் குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.
தந்தையின் உடல்நலத்தை கண்டு ஐஸ்வர்யா ராய் மிகவும் கவலையாக உள்ளதாகவும், தந்தையை ஐஸ்வர்யா உடன் இருந்து கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் தற்போது வரை அவர் ஐ சி யு வார்டில் தான் உள்ளார். ஐஸ்வர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் கவலையில் இருந்தாலும் அவர்களை பார்க்க மருத்துவமனையை நோக்கி சந்தோஷமாக ரசிகர்கள் பார்க்க வந்து செல்வதாக கூறப்படுகிறது .
