ishwarya rai acting manirathnam movie
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த காற்று வெளியிடை திரைப்படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் 'ராம்சரண் தேஜா' நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும், இந்த படத்தில் வில்லனாக அரவிந்தசாமி நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு 'யோதா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.
இந்த நிலையில் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகி ஐஸ்வர்யாராய் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் 'இருவர்', 'குரு' மற்றும் 'ராவணன்' ஆகிய படங்களில் ஐஸ்வர்யாராய் நடித்துள்ளார்.
தற்போது இந்த படத்தில் ஐஸ்வர்யா நடிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
