சீரியல் நடிகர், ஈஸ்வர் அவருடன் 'தேவதையை கண்டேன்' சீரியலில் நடித்து வரும் நடிகை மகாலட்சுமியுடன் தவறான உறவில் இருந்து வருகிறார் என்றும், அதன் காரணமாக தன்னை அடித்து கொடுமை படுத்தி, விவாகரத்து வரை சென்று விட்டதாக அவருடைய மனைவி ஜெயஸ்ரீ கூறிய புகார் ஒட்டு சின்னத்திரை பிரபலங்கள் மாற்று ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. 

இந்நிலையில், தற்போது ஜெயஸ்ரீ பல்வேறு மீடியாக்களை சந்தித்து குழந்தையுடன் சேர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வரும் நிலையில், நேற்று புழல் சிறையில் இருந்து பெயிலில் வெளியே வந்த ஈஸ்வர், முதல் வேலையாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, ஜெயஸ்ரீக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு இருப்பது உண்மை என்றும், ஆனால் தனக்கும் மகாலட்சுமிக்கும், கோ ஸ்டார் என்பதை தவிர, வேறு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.

ஆனால், மகாலட்சுமியின் கணவருடன் ஜெயஸ்ரீ தான் பழக்கம் வைத்துள்ளதாக புதிய வெடியை கிள்ளி போட்டுள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து ஜெயஸ்ரீ பார்ட்டி செய்தது, தண்ணி அடித்தது என அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாகவும். இந்த வருட தீபாவளியை மகாலக்ஷ்மியின் கணவருடன் தான் ஜெயஸ்ரீ கொண்டாடியதாக தெரிவித்துள்ளார்.

ஜெயஸ்ரீ தன்மீது கூறிய அனைத்து புகார்களையும் பொய் என கூறுவதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளது, தனக்கும் - ஜெயஸ்ரீக்கும் உள்ள பிரச்சனையில் குழந்தையை தயவு செய்து இழுக்க வேண்டாம் என ஈஸ்வர் கூறியுள்ளார். ஆனால் மகாவின் கணவருக்கும் ஜெயஸ்ரீக்கும் பழக்கம் உள்ளதாக ஈஸ்வர் கூறியுள்ளது புதிய ட்விஸ்ட். இதற்கு ஜெயஸ்ரீ என்ன சொல்வார் என பொறுத்திருந்து பார்ப்போம்.