கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் மகாலட்சுமி மற்றும் நடிகர் ஈஸ்வரின் காதல் விவகாரம். இதுகுறித்து முதலில், சீரியல் நடிகையும், ஈஸ்வரின் மனைவியுமான ஜெயஸ்ரீ கூறியபோது ஈஸ்வரின் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின் ஜெயஸ்ரீ மருத்துவ சான்றிதழோடு, கடுமையாக ஈஸ்வரால் தாக்கப்பட்டார் என மருத்துவமனை சார்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பெயரில், கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் கணவர் ஈஸ்வர் மற்றும் மகாலக்ஷ்மியின் காதல் விவகாரம் குறித்து, பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

இதை தொடர்ந்து, ஜாமினில் வெளி வந்த ஈஸ்வர், ஜெயஸ்ரீ கொடுத்த புகாரை மறுத்தார். ஈஸ்வர் பதில் கொடுத்த பின்பு, மகாலட்சுமியும் ஜெயஸ்ரீயின் புகாரை மறுத்தார். தற்போது இவர்களுடைய விவகாரம் சற்று தனித்திருந்தாலும், மகாலட்சுமி மற்றும் ஈஸ்வர் இணைந்து பணியாற்றி வந்த 'தேவதையை கண்டேன்' சீரியல் நிர்வாகம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது 'தேவதையை கண்டேன்' சீரியலை விரைந்து முடிக்க முடிவு செய்துள்ளார்களாம் டிவி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இவர்களை தவிர சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடிப்பவர்கள் பெருதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

எனினும், இந்த சீரியலை முடித்த கையோடு மற்றொரு புதிய சீரியல் தொடங்க உள்ளதாகவும் அதில், இந்த சீரியலில் நடித்த அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளதாக, நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்த சிலர் கூறி வருகிறார்கள். எது எப்படி இருந்தாலும் இரண்டு மாதமாவது சிறிய நடிகர்கள் இழந்த வாய்ப்பால், பண கஷ்டத்திற்கு ஆளாவார்கள்....