பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை இஷா குப்தா. சமீபத்தில் பெங்களூரில் பெண்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பிரபல கட்சியின் எம்.எல்.ஏ அபு அஸ்மி எங்கு சர்க்கரை இருக்கின்றதோ, அதை தேடி தான் எறும்பு செல்லும் என மிகவும் மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதை கண்டு கோபமான நடிகை இஷா குப்தா ‘உங்களை சொல்லி குற்றம் இல்லை உங்களை வளர்த்தவர்களை தான் கூற வேண்டும் என கூறி அவரது பெற்றவர்களை குறை சொல்வது போல் சாடினார்.

இதனால் கோபமான அந்த கட்சியின் பிரமுகர் ஒருவர் முதலில் நீங்கள் உடம்பை காட்டாமல் நடியுங்கள் என இஷா குப்தாவின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த விஷயம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது, பல ட்விட்டர் மூலம் அந்த கட்சி பிரமுகருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளதால், நடிகையால் ஒன்றும் பேச முடியவில்லை