தமிழ் திரையுலகத்திற்கு குட் பை சொல்லிவிட்டு சென்ற நடிகைகள் பலர் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க துவங்கியுள்ளனர். அந்த வகையில் கஜோல், ஜெயப்பிரதா, மனீஷா கொய்ராலா, என தொடந்து ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.  

தற்போது விஜய்யுடன் 'நெஞ்சினிலே', விஜயகாந்துடன் 'நரசிம்மா', 'காதல் கவிதை' போன்ற பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட இஷா கோபிகர், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கி வரும் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இஷா கோபிகர் கடைசியாக 2001  வருடம், விஜயகாந்த் நடித்த 'நரசிம்மா' படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு... பாலிவுட் திரையுலகில் நடிக்க அதிகமாக வாய்ப்பு கிடைத்ததால் தமிழ் திரையுலகிற்கு குட் பை கூறிவிட்டு சென்றார். 

இந்நிலையில் 18 வருடங்கள் கழித்து இவரை மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பாலிவுட், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் இவர், கடந்த வாரம், மும்பையில் நடைபெற்ற விழாவில் நிதின் கட்கரி முன்னிலையில் பாஜக கட்சியில் இணைத்தார். இவர் இணைந்த அன்றே இவருக்கு, மகளிர் போக்குவரத்து துறையின் செயல் தலைவர் என்கிற பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் சிவகார்த்திகேயன் படத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.