நாட்டுப்புற பாடகர், புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமியின் மகள் பல்லவியை காணவில்லை என இவர்கள், சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன காரணத்திற்காக, பல்லவி வீட்டை விட்டு வெளியேறினார். அவருக்கு என்ன ஆனது? என சமூக வலைதளத்தில் புஷ்பவனம் குப்புசாமியின் ரசிகர்கள் பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, புஷ்பவனம் குப்புசாமியின் மூத்த மகள் பல்லவிக்கும், இரண்டாவது மகளுக்கும் சாதாரணமாக ஏற்பட்ட வாய் தகராறு முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பல்லவி, மிகவும் கோபமாக தன்னுடைய காரை எடுத்து கொண்டு சென்றுள்ளார்.

அவரை போனில் தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தும் முடியவில்லை. அவரின் நண்பர்களிடம், பல்லவி எங்கு இருக்கிறார் என தெரிந்து கொள்ள மேற்கொண்ட முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது.

மேலும் அவரே தங்களை தொடர்பு கொள்வார் என காத்திருந்தும், பல்லவியிடம் இருந்து எந்த பதிலும் இல்லாததால், உடனடியாக போலீசில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் பல்லவியை தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் அவரின் செல் போன் சிக்னலை வைத்தும் கண்டு பிடிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், பல்லவி கிடைத்து விட வேண்டும் என, குடும்பமே அவரை கண்ணீரோடு தேடி வருகிறார்கள்.