கால்ஷீட் சொதப்பலால் ரொம்ப காலமாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே களம் இந்த படத்தில் நடித்துவருகிறது. 

சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சிம்பு கூறிய குட்டி கதை, சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த குட்டி கதையில் ஒருத்தன் ரொம்ப கஷ்டப்படுறான், அவனை வளர விடமாட்டேங்குறாங்க, அவன் முன்னேறுனா கீழ தள்ளிவிடுறாங்க, தொடர்ந்து அவனுக்கு பிரச்சனை தர்றாங்க அப்படின்னா அவன் யாருங்க என்று கேட்கிறார்... அதற்கு மாணவர்கள் அனைவரும் ஹீரோ என்று கத்துகின்றனர். 

தொடர்ந்து ஒருத்தன் ஜெயிச்சிக்கிட்டேன் இருக்கான், அவனுக்கு வாழ்க்கையில கஷ்டமே இல்ல. நம்ம தான் இனிமேன்னு நினைச்சி எல்லாருக்கும் பிரச்சனை கொடுக்குறான் அவன் யாருங்க என கேட்கிறார். அதற்கு வில்லன் என கத்துகின்றனர். 

கடைசியாக குட்டிகதையை முடித்த சிம்பு, அந்த ஹீரோவா என்ன கடவுளும், நீங்களும் சேர்ந்து ஆக்கியிருக்கீங்க என்று சொல்லி, அண்ணாமலையில் சூப்பர்  ஸ்டார் சவால் விடும் சீனை நினைவுகூர்ந்தார். பெயரை குறிப்பிடாமல் சிம்பு குட்டி கதை சொல்லி முடிச்சாலும், நெட்டிசன்கள் அவர் பேசுனது அத்தனையும் தனுஷ் பற்றி தான் என சோசியல் மீடியாவில் கொளுத்தி போட்டுள்ளனர்.