வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "அசுரன்" திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த "பட்டாஸ்"  பொங்கல் விருந்தாக ஜனவரி 16ம் தேதி திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்திற்கு தற்காலிகமாக "D40" என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற நிலையில் , இரண்டாம் கட்ட படிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. 'பேட்ட' படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் வரும் ரஜினி போலவே மீசை வைத்துக் கொண்டு, தனுஷ் இந்த படத்தில் நடித்துவருகிறார். தனுஷைக் காண ஏராளமான ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பார்ட்டிற்கு படையெடுப்பதால், அங்கு நடக்கும் விஷயங்கள் சுடச்சுட சோசியல் மீடியாவிற்கு வந்துவிடுகிறது. 

அதனால் தான் இதற்கு முன்பு மதுரையில் படமாக்கப்பட்ட திருமண பாடல் காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 'பேட்ட' படத்திலும் சசிக்குமார் திருமணத்தின் போது தான் ரஜினி பெரிய மீசை வைத்துள்ள கெட்டப்புடன் தோன்றுவார். அதேபோல் "D40" படத்திலும் தனுஷ் மாப்பிள்ளை கெட்டப்பில் திருமணத்திற்காக செல்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. 

'பேட்ட' படத்தை இயக்கிய அதே கார்த்திக் சுப்புராஜ் தான் தனுஷின் "D40" படத்தையும் இயக்கி வருகிறார். மேலும் பேட்ட படத்தில் எப்படி அது பிளாஷ்பேக் காட்சியோ, "D40" படத்திற்காக மதுரையில் ஷூட் செய்யப்படுவதும் பிளாஷ்பேக் காட்சிகள் தான் என்று கூறப்படுகிறது.  இதையெல்லாம் கணக்கு போட்டு பார்த்த நெட்டிசன்கள், இது தனுஷின் "D40" படமா?, இல்ல "பேட்ட 2" ஆ என மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.