Is this a Sivakarthikeyan the next film title? Good luck ...

சிவகார்த்திகேயன் – சமந்தா இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு "சீம ராஜா" என்று தலைப்புள் வைத்துள்ளதாம் படக்குழு.

"வருத்தப்படாத வாலிபர் சங்கம்", "ரஜினி முருகன்" போன்ற படங்களைத் தொடர்ந்து மூன்றவாது முறையாக பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்க இருக்கிறார்.

தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. சமீபத்தில் நடைப்பெற்ற "வேலைக்காரன்" இசை வெளியீட்டில் கூட சிவகார்த்திகேயன் கெட்டப்பை வைத்து நீங்களே யூகித்து இருக்கலாம் கதைக்களம் எப்படி இருக்கும் என்று.

இந்த படத்தில், காமெடி கதாபாத்திரத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து சூரி நடிக்கிறார்.

இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு "சீம ராஜா" என்ற பெயரை வைக்க படக்குழு முடிவு எடுத்துள்ளது என்று தகவல்கள் கசிகின்றன.