35 வயதனாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அளவிற்கு உயர்ந்து நிற்கிறார் நயன்தாரா. முன்னணி நடிகர்களின் படம் என்றாலே நயன்தாரா கால்ஷீட் முக்கியம் என்பது போல் ஆகிவிட்டது. அப்படித்தான் கடந்த ஆண்டு வெளியான பிகில், தர்பார் இரண்டு திரைப்படங்களிலும் நயன்தாராவிற்கு முக்கியத்துவமே இல்லை என்றாலும், ஸ்டார் ஹீரோக்களுக்காக கோடிகளில் சம்பளம் கொடுத்து நடிக்க வைத்திருப்பார்கள். அவரும் வந்ததுக்கு ஒரு பாட்டுக்கு ஆட்டத்தை போட்டுவிட்டு போய் இருப்பார்கள். 

தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் முதன் முறையாக நயன்தாரா அம்மன் கெட்டப்பில் நடித்துள்ளார். கொரோனா காரணமாக தியேட்டர்கள் திறக்கபடாததால் படம் வெளியாகாமல் உள்ளது. அதுமட்டுமின்றி காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் காத்து வாக்குல இரண்டு காதல், அவருடைய தயாரிப்பில் நெற்றிக்கண், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் வெயிட்டான கதாபாத்திரம் என அம்மணி கைவசம் பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. 

உச்சத்தில் இருக்கும் மார்க்கெட்டை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நயன்தாரா, சமீபத்தில் இந்தி பட ரீமேக் ஒன்றில் நடிப்பதற்காக கால்ஷீட் கேட்டு வந்த தயாரிப்பாளரிடம் கேட்ட சம்பள தொகை கோலிவுட்டில் பல கிசு கிசுக்கள் கிளம்பியது. ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அந்தூதுன் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்தனர். 

தெலுங்கு ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் நிதின் நடிக்கிறார். அந்தாதுன் படத்தில் ஆயுஷ்மான் குரானாவின் கதாபாத்திரத்திற்கு இணையானது தபுவின் கதாபாத்திரம். கள்ளக்காதலுக்காக கணவரையே கொலை செய்யும் பெண்ணாக நடித்திருந்தார் தபு. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவை  கேட்டதாகவும், அதற்கு 4 கோடி சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை மிரள வைத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் உண்மையான காரணம் அது இல்லையாம், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்தால் தனது இமேஜ் டேமேஜாகிவிடும் என்பதால் தான் நயன்தாரா நடிக்க மறுத்துவிட்டாராம்.