actress saranya mohan husband stress talk

திரையுலகத்தை பொறுத்தவரையில், நடிகைகள் எப்படி இருந்தாலும் ஒரு சிலர் தொடர்ந்து அவர்களை கிண்டலடித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

அதிலும் சிக்கென்று இருந்த நடிகைகள் வெயிட் போட்டு விட்டால், சொல்லவே வேண்டாம் மீம்ஸ், போட்டே கலாய்த்து தள்ளி விடுவார்கள் அந்த வரிசையில் தற்போது புதிதாய் இணைந்தவர் நடிகை சரண்யா மோகன்.

இவர் திருமணம் ஆவதற்கு முன் ஸ்லிம்மாக, சின்னப்பொண்ணு போல் இருந்தார், தற்போது குழந்தை பிறந்ததும் செம குண்டாக இருக்கிறார். இதனை சிலர் தொடர்ந்து கிண்டல் செய்துகொண்டிருந்தனர். 

சரண்யா மோகனும் சில நாட்களுக்கு முன் இவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார். அப்போது ஓயாத நெட்டிசல் மேலும் கிண்டல் செய்யவே... நடிகை சரண்யா மோகனின் கணவர் அரவிந்த் கிருஷ்ணா கொதித்தெழுந்து, நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கும் பொது என் பொண்டாட்டி குண்டானது ஒரு பிரச்சனையா என நெட்டிசென்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.