ராஜமெளலி சார் மீது எனக்கு எப்போதுமே மரியாதை உள்ளது, யாரோ வெட்டியாக இருப்பவர்களின் கற்பனை இது. என்னை அவந்திகா கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததற்காக ராஜமெளலி சாருக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என பாகுபலி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வாசித்துள்ளார் நடிகை தமன்னா.

பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்து ரூ.350 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாரிக்கப்பட்ட பாகுபலி–2 படம் உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் கடந்த மாதம் 28 ஆம் தேதி வெளியாகி பத்து நாட்களுக்குள் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்துள்ளது. 

பாகுபலி போன்று பாகுபலி 2 படத்தில் தமன்னாவுக்கு முக்கியத்துவம் இல்லை. அவர் நடித்த பல காட்சிகளை ராஜமவுலி நீக்கிவிட்டாராம். இரண்டாம் பாகத்தில் தமன்னா பெயருக்கு தான் வந்து சென்றுள்ளார்.

பாகுபலி 2 படத்தை பார்ப்பவர்கள் எல்லாம் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணனை புகழ்கிறார்களே தவிர யாரும் 

இதனால் தம்மை யாருமே கண்டுகொள்ளவே இல்லை. பாகுபலி 2 படத்தில் தன்னை டம்மியாக்கிய ராஜமவுலி மீது தமன்னா கோபத்தில் இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் உலாவிய நிலையில் இச்சர்ச்சை குறித்து தமன்னா முற்று புள்ளி வைக்கும் வகையில் பேட்டி அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், "யாரோ வெட்டியாக இருப்பவர்களின் கற்பனை இது. என்னை அவந்திகா கதாபாத்திரத்தில் நடிக்க வைத்ததற்காக ராஜமெளலி சாருக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன். இது ஆதாரமற்ற செய்தி, படத்தில் வேலை செய்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி.

ராஜமெளலி சார் மீது எனக்கு எப்போதுமே மரியாதை உள்ளது. இந்த சரித்திரப் படத்தில் நடித்ததில் எனக்கு பெருமை. ஒரு நடிகையாக என் வாழ்வை இந்தப் படம் பூர்த்தி செய்தது. திரைத்துறையில் இருக்கும் மற்றவர்களும் தொட வேண்டிய உச்சத்தை இன்னும் உயர்த்தியுள்ளது." என்று தெரிவித்துள்ளார் தமன்னா.