Asianet News TamilAsianet News Tamil

கெட்டவார்த்தை பேசினா என்னாங்க தப்பு..? அண்ணாத்த படத்தை அசிங்கமாக விமர்சித்த யூடியூப் சேனல் தெனாவெட்டு..!

நான் சாதியவாதம் பேசவில்லை. மதவாதம் பேசவில்லை. பெண்ணடிமைத்தனம் பேசவில்லை... இதுவே இவையெல்லாவற்றிற்கும் எதிராக பேசுகிறேன். 

Is it wrong for me to speak bad words ..? Description of the YouTube channel that criticized the ugly movie Annatha ..!
Author
Tamil Nadu, First Published Nov 15, 2021, 11:19 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சாதியவாதம், மதவாதம், பெண்ணடிமைத்தனம் பற்றி பேசினால் தான் தப்பு கெட்டவார்த்தை பேசுவதில் தவறில்லை என அண்ணாத்த படத்தை பற்றி கெட்ட வார்த்தை விமர்சனம் போட்ட யூடியூப் சேனல் விளக்கமளித்துள்ளது. 

பிலிப் பிலிப் தமிழ் என்ற யூடியூப் சேனலில் திமுக அனுதாபியான குருபாய் என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து அண்ணாத்த படத்தை கெட்டை வார்த்தைகளால் மிக மோசமாக விமர்சித்து இருந்தார்கள். Is it wrong for me to speak bad words ..? Description of the YouTube channel that criticized the ugly movie Annatha ..!

அந்த விமர்சனத்தில், ‘’ நம்மவீட்டு பிள்ளை படம் வரும்போது** போன’ அப்படினு கேட்டால் என்ன சொல்லலாம். காளையன் வந்து உட்கார்ந்து தனது வசனங்களை ஆரம்பிக்கிறார். ஒரு ரெண்டே முக்கால் மணி நேரம் ஒரு குடிகார ** கிட்ட மாட்டிக்கொண்ட மனநிலை இருந்தது. சுடுமணலில் காலை வைத்தது மாதிரி சுக்குன்னு இருந்தது. வேலைக்காரி இடுப்பை பிடித்த மாதிரி கிளுக்குன்னு இருந்தது. சாதரணமா சொல்லனும்ணா இந்த வெரைச்ச மண்டக்காரனுக்கு புரியலையா.? என கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி படுகேவலமாக விமர்சித்து இருந்தனர். 

இது பார்ப்பவர்களுக்கு ஆத்திரமூட்டும் வகையில் இருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக கலை, பண்பாட்டு பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’அவர்  தாதா சாஹேப் பால்கே அவார்டு பெற்றவர். ஏறக்குறைய 50 ஆண்டுகளாக ரசிகர்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த பெரிய மனிதரைப் பற்றி இந்த இரண்டு தகுதியற்றவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பெரியவர்களை மதிக்காத பகுத்தறிவாளர்களான இவர்களை திமுகவும் முதல்வர் ஸ்டாலினும் ஆதரிக்கின்றனர் என்று கூறியுள்ளார் Is it wrong for me to speak bad words ..? Description of the YouTube channel that criticized the ugly movie Annatha ..!

 முதல்வரும் ஆதரிக்கிறார். இதை ஒரு நடிகரோ, சினிமா சங்கமோ கண்டிக்க முன்வருவதில்லை. அவர்களுக்கெல்லாம் தி.மு.க.வுக்கு பயமா அல்லது மொத்தத் துறையும் தி.மு.க குடும்பத்துக்காக உழைக்கிறதா? எனக் கேள்வி எழுப்பிஇருந்தார். அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார். இது பிலிப் பிலிப் தமிழ் யூடியூப் நடத்துனர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் கெட்டவார்த்தை விமர்சனம் குறித்து மன்னிப்புக்கேட்டு அந்த குழுவினர் ஓரு வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’தற்போது புது மக்களிடம் போய் நமது சேனல் சேர்ந்திருக்கிறது. அவர்களுக்கு எங்களின் யூட்யூப் சேனல் பார்க்கும்போது குழப்பமாக இருக்கலாம். கேள்விகள் வரலாம். எதிர்மறையான எண்ணங்கள் தோன்றி இருக்கலாம். அவர்களுக்காகத்தான் இந்த வீடியோ. எங்கள் யூடியூப் சேனலில் நாங்கள் என்ன செய்கிறோம், படங்களை ரோஸ் பண்ணி வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறோம். மூன்று நான்கு வருடங்களாகவே படத்தை ரோஸ்ட் செய்து கொண்டிருக்கிறோம்.

 Is it wrong for me to speak bad words ..? Description of the YouTube channel that criticized the ugly movie Annatha ..!

அது என்ன ரோஸ்ட் என்றால் படத்தை கலாய்ப்பது. இப்படத்தை ரோஸ்ட் செய்கிறோம் என்றால் அந்த பட இயக்குனரையோ அல்லது நடிகரையோ தனிபட்ட முறையில் ரோஸ்ட் செய்யவில்லை. அந்தப் படத்தில் இருக்கிற கேரக்டர் அவர்கள் பேசுகிற வசனங்கள் அந்த படத்தோட திரைக்கதை இவற்றில் ஏதாவது பிற்போக்குத்தனம் இருந்தால் அவற்றை வைத்து நாங்கள் அந்தப் படத்தை செய்வோம். 

இதைத்தான் தொடர்ச்சியாக பண்ணிக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு நாங்கள் செய்கிற விஷயங்கள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அண்ணாத்த ரோஸ்ட் வீடியோ பார்த்துவிட்டு சிலர் வருத்தப்படுகிறார்கள். அது எனக்குமே வருத்தம் தான். என்னோட நோக்கம் அவர்கள் வருத்தப்பட வேண்டும் என்பது கிடையாது. எங்களின் சேனல் நோக்கமே அது கிடையாது. என்னடா இவன் ரோஸ்ட் ரோஸ்ட் என்கிறான் பாரின் ட்ரெண்டை இங்கே கொண்டு வருகிறான் என்று எண்ணாதீர்கள். நம்ம ஊரில் இருந்த விஷயம்தான்.

கோவில் திருவிழாவில் தெருக்கூத்துகளில் பபூன் என்று ஒருத்தர் வந்து செய்துவிட்டுப் போவார் அதுதான் ரோஸ்ட். அதை பார்த்துவிட்டு தான் பலர் இங்கே வளர்ந்திருக்கிறார்கள். அவர் கெட்ட வார்த்தை பேசுவார். நமது கலாச்சாரத்தில் ஒரு பகுதியாக இருந்த ஒரு விஷயம்தான் இது. இன்னும் சொல்லப் போனால் இந்த மண்ணுக்காக எத்தனையோ தலைவர்கள் பிற்போக்குத் தனத்தை ரோஸ்ட் செய்திருக்கிறார்கள். நான் என்ன பேசுகிறேன் என்பது எல்லாவற்றையும் விட்டுவிட்டு என் முன்னாடி தொடர்ச்சியாக வைக்கப்படும் கேள்வி நீ ஏன் கெட்ட வார்த்தை பேசுகிறாய்? என்கிறார்கள்.

நான் சாதியவாதம் பேசவில்லை. மதவாதம் பேசவில்லை. பெண்ணடிமைத்தனம் பேசவில்லை... இதுவே இவையெல்லாவற்றிற்கும் எதிராக பேசுகிறேன். மக்களுடன் மக்களுடைய மொழியில் பேசி விட்டுப் போகிறேன். கெட்ட வார்த்தை, கெட்ட வார்த்தை என்கிறீர்களே..? கெட்ட வார்த்தை என்பது வார்த்தைகளில் அல்ல. அதன் நோக்கத்தில் தான் உள்ளது. சமத்துவத்திற்கு, சமூக நீதிக்கும் எதிராக பேசுகிற எல்லாவற்றையும் கெட்ட வார்த்தை தான். அதேநேரத்தில் சமூகநீதிக்கு ஆதரவாக பேசிய அனைத்து வார்த்தைகளும் நல்ல வார்த்தைகள் தான். மக்களுடைய மொழியை கெட்ட வார்த்தை என்றும் அவர்கள் பேசிய அரசியலை அது இந்த மக்களுக்கு எதிரான அரசியல் மண்ணுக்கு இதன் அரசியல். 

எங்கள் வீடியோக்களில் கெட்ட வார்த்தை இருக்கிறது, கெட்ட வார்த்தை இருக்கிறது என்கிறீர்களே. அதை எடுத்து ஓரமாக வைத்து விடுங்கள். நாங்கள் ஒருநாளும் சமூக நீதிக்கு எதிராகப் பேசவில்லை. சமத்துவத்துக்கு எதிராகப் பேசவில்லை. இனிமேல் பேச மாட்டோம்’’ எனத் தெரிவித்துள்ளார். சமத்துவத்திற்கு எதிரா பேசமாட்டீங்க... சமூக நீதிக்கு எதிரா பேச மாட்டீங்க... அப்போ கெட்டவார்த்தை பேசுவதை நிறுத்த மாட்டீங்க..?!

Follow Us:
Download App:
  • android
  • ios