இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பாலிவுட் நடிகையுடன் சுற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக வலம்வருபவர் ஹர்திக் பாண்டியா. கபில் தேவுடன் பாண்டியாவை சிலர் ஒப்பிடும் அளவுக்கு சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்கிறார். இந்திய அணியின் வெற்றிக்கு, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என ஏதேனும் ஒன்றிலாவது பாண்டியாவின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும். 

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் முடிந்து, இன்று இலங்கையில் தொடங்கும் முத்தரப்பு தொடரிலிருந்து பாண்டியாவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே பாண்டியாவும் பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவும் காதலித்துவருவதாக கூறப்பட்டது. அதை இருவருமே மறுத்தனர். இந்நிலையில், பாண்டியா நடிகை எல்லி அவ்ரமை காதலிப்பதாக கூறப்படுகிறது.

கிஸ் கிஸ்கோ பியார் கரூன், நாம் ஷபானா, போஸ்டர் பாய்ஸ் உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்தவர் எல்லி அவ்ரம். பாண்டியாவும் எல்லியும் ஒரே காரில் மும்பை விமான நிலையத்துக்கு நேற்று வந்தனர். பாண்டியா மட்டும் காரில் இருந்து இறங்கிக் கொள்ள, எல்லி அவருக்கு கை காட்டி விடைகொடுத்தார். 

இதைக் கண்ட சிலர் புகைப்படம் எடுத்தனர். எல்லி உடனடியாகத் தனது தலையை மறைக்க முயன்றார். இருந்தும் சிலரின் கேமராவில் இருவரும் சிக்கிக்கொண்டனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.