Iranian director who is preparing three languages simultaneously Time for the Tamil film industry

உலகப் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநரான மஜித் மஜித் இயக்கும் படம் தற்போது ஆங்கிலம், இந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

1992-ஆம் ஆண்டில் வெளியான ‘பாதுக்’ என்ற ஈரானிய படத்தின் மூலம் இயக்குநரானவர் மஜித் மஜிதி.

அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த திரைக்கதைக்கான சர்வதேச விருதினை வாங்கியவர்.

இவர் தற்போது ‘பியான்ட் தி க்ளைட்ஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

உலகளவில் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

இதில் இந்தியின் முன்னணி நடிகரான ஷாகித் கபூரின் இளைய சகோதரர் இஷான் கட்டார் கதையின் நாயகனாகவும், மாளவிகா மோகனன் என்ற மலையாள தேசத்து மங்கை கதையின் நாயகியாகவும் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் தமிழ் சினிமாவின் மூத்த நடிகை ஜி வி சாரதாவும் நடிக்கிறார்.

இந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் இயக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார் மஜித் மஜிதி.

அதுமட்டுமன்றி இந்த படம், தமிழிலும் தயாராகிறது என்ற தகவலையும் வெளியிட்டு மகிழ்ச்சியைத் தெரிவித்தனர் படக்குழுவினர்.