உச்ச கட்ட ஆபாசத்தின் வெளியாகி, தாறுமாறான விமர்சனங்களை பெற்று வருகிறது இரண்டாம் குத்து படத்தின் இரண்டு நிமிட வீடியோ 

தமிழ் சினிமாவில் அடல்ட் படமான ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில் புதுமுக நடிகை, அக்ரிதி சிங், மீனெல் ஷா, என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் மொட்டை ராஜேந்திரன், பிக்பாஸ் டேனியல், ரவி மரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கிய இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தற்போது இரண்டாம் குத்து படத்தின் டீச்சருக்கே கடும் கண்டனங்கள் நிலையில், தீபாவளிக்கு இந்த படம் ரிலீசாக உள்ளது.

இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக கடந்த ஓரிரு நாட்களுக்கு முன், படத்தின் இயக்குனர் சந்தோஷ் ஜெயப்ரகாஷ் தெரிவித்தார். மேலும் இந்த படத்தின் மீதான, எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் விதத்தில் 'இரண்டாம் குத்து' படத்தின் இரண்டு நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது.

டீசரை மிஞ்சிய ஆபாசத்தின் உள்ளது இந்த இரண்டு நிமிட காட்சி. ஏற்கனவே கண்ட மேனிக்கு டீசரை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள், இந்த படத்தையும் வெளுத்து வாங்க தயாராகி வருகிறார்கள். மொத்தத்தில் ஒரு பெண்கள் கூட இந்த படத்தை பார்க்கவே கூடாது என்கிற நோக்கத்தில் இந்த படத்தை இயக்குனர் எடுத்துள்ளது போல் தெரிகிறது.

ஆபாசத்தின் ஒட்டு மொத்த உருவாக வெளியாகியுள்ள இந்த படத்தின் இரண்டு நிமிட காட்சி இதோ...