லேடி சூப்பர் ஸ்டார் என்று கோலிவுட் ரசிகர்களிடம் பெயர் வாங்கிய நடிகை நயன்தாரா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் 'கோலமாவு கோகிலா' படத்தை தொடர்ந்து, கதாநாயகியை முழுமையாக வைத்து எடுக்கப்படும் திரைப்படமான 'ஐரா'  படத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரோடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில், நடிகை நயன்தாராவுக்கு சகோதரியாக திருநங்கை ஜீவா நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'தர்மதுரை' படத்தில் துணை நடிகையாக நடித்தவர்.

மேலும் இந்த படத்தில், முதல்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஒரு வேடத்தில் கருப்பு நிறத்தில் தோன்றும், கிராமத்து பெண் கேரக்டரில் நயன்தாரா நடித்துள்ளார்.   சமீபத்தில் வெளியான டீசரில் இருந்து தெரியவந்தது.

இயக்குனர் சார்ஜுன் இயக்கத்தில்,  கே.எஸ் சந்திரமூர்த்தி இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாராவுடன் நடிகர் கலையரசன், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.