சிம்பு, வெங்கட் பிரபு காம்பினேஷனில் ‘மாநாடு’படத்தைத் தயாரிப்பதாக இருந்த சுரேஷ் காமாட்சி முதல்முறையாக டைரக்டர் அவதாரம் எடுத்திருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’.அப்படியே படத்தின் டைட்டிலுக்கு நேர் எதிராக, இப்படம் தயாராகி கிட்டத்தட்ட ஓராண்டாகியும் இன்னும் திரைக்கு வந்தபாடில்லை. அந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்பதை தனது முகநூல் பக்கத்தில் சற்றுமுன்னர் பதிவிட்டிருக்கிறார் அவர்.

அவரது முகநூல் பதிவு இதோ...நலம் விரும்புபவர்களுக்கும்... நண்பர்களுக்கும் வணக்கம்...ஒரு நல்ல சினிமாவை எடுப்பது மட்டுமல்ல .. அதை சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இல்லையென்றால் எந்தப் படைப்புமே அர்த்தமற்றதாகிவிடக்கூடும்.’மிக மிக அவசரம்’ படத்தைப் பொருத்தவரையில் நிறைய பாராட்டுக்கள் ஏற்கெனவே மனம் நிறைத்திருக்கின்றன.

ஆனபோதும்...வெளியீட்டின் நாட்கள் மட்டும் தள்ளிக் கொண்டே போனது.படம் நன்றாக இருக்கும்போது அது சரியான வெளியீட்டைத் தீர்மானிக்கும் என இருந்தேன்.எதிர்பார்த்ததுபோல் சினிமாவை... மிக நல்ல சினிமாக்களை நேசிக்கும் ... அவற்றிற்கு கைகொடுத்து வரும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் தற்போது வாங்கி வெளியிட இருக்கிறது. மிக மிக அவசரம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. என்னுடைய வளர்ச்சியில் எப்போதும் துணை நிற்பவர்கள் நீங்கள்.

இந்தப் படத்தைப் பாருங்கள். வெற்றி பெறச் செய்யுங்கள். பார்த்தவர்கள் ஏற்கெனவே உங்கள் பாராட்டை தந்துவிட்டீர்கள். ஆனாலும் இப்போது மீண்டும் ஒருமுறை இப்படத்தைப் பற்றிய உங்கள் பார்வையை மக்களுக்கு நினைவுபடுத்தக் கேட்டுக் கொள்கிறேன்.இப்படத்தை உருவாக்க உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றிகள்.வெளியிட இருக்கும் லிப்ரா திரு. ரவீந்தர் சந்திர சேகர் அவர்களுக்கு ஸ்பெசல் நன்றிகள்...நான் தயாரித்திருப்பதாலோ... அல்லது இயக்கியிருப்பதாலோ சொல்லவில்லை.’மிக மிக அவசரம்’ நிச்சயம் உங்களை ஏமாற்றாது...