internet disconneted kamalahaasan strictly warning for tamilnadu government
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பொதுமக்கள் போராட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இன்றும் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் பதட்டம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை முதல் நெல்லை, குமரி மற்றும் துத்துக்குடி மாவட்டங்களில் இண்டர்நெட் சேவை திடீர் என நிறுத்தப்பட்டது.
இண்டர்நெட் சேவையை நிறுத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் இது குறித்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளது, "தூத்துக்குடி இணையம் துண்டிப்பா'? அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கிவைப்பீர்களா? சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும். மக்களின் வலிமையை எதிர் கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை. அதுவும் இந்த அரசுக்கு இல்லவே இல்லை என்று கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதே போல் இண்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு சென்னை நீதிமன்றம் இன்று பிற்பகல் விசாரணை செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
