நடிகர் விஜய் சேதுபதி, திரைத்துறையை தாண்டி, சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக இருப்பவர். இதனால் பலருக்கு தன்னால் முடித்த உதவிகளை செய்து வருகிறார்.

மேலும் அவ்வப்போது, சமூகத்தில் எழும் பிரச்சனைகளுக்கு அதரவாக குரல் எழுப்ப துவங்கியுள்ளார். இதனால் இவரை தேடி சென்று பல்வேறு குழுக்களைக் சேர்ந்தவர்கள் இவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்கள். 

விஜய் சேதுபதியும் தன்னை தேடி வருபவர்களை வெறும் கையேடு அனுப்பாமல், ஏதேனும் அன்பளிப்பு கொடுத்து வருகிறார். 

இந்நிலையில் இவரை சந்திப்பவர்களில் சிலர், அரசுக்கு எதிராக செயல்படும் குழுக்கள் என்று, உளவுத் துறை போலீசார் கண்டுபிடித்துள்ளதாகவும், இதனால் நடிகர் விஜய் சேதுபதியின் மொத்த அசைவுகளையும் போலீசார் கண்காணிக்க துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து, பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள விஜய் சேதுபதி, "சமூகத்தின் மீது அக்கறை கொண்டவன் நான்.... அதனால், சமூகத்திற்கு எதிராக நடக்கும் பிரச்சனைகள் குறித்து, கருத்து தெரிவிக்கிறேன். 

என் கருத்து பிடித்திருப்பவர்கள், குழுக்களாக வந்து என்னை சந்திக்கிறார்கள், தனக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறார்கள். இதனால் மக்கள் பிரச்சனைக்காக போராடும் அவர்களுக்கு, என்னால் முடிந்த பண உதவிகளை செய்கிறேன். மற்றபடி, அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? தீவிரவாதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களா? என்பது குறித்தெல்லாம் எனக்கு தெரியாது.... அது எனக்கு தேவையும் இல்லை என கூறியுள்ளார்.

இருப்பினும், நடிகர் விஜய் சேதுபதி நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.