விஜய் நடித்த பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அந்தப்படத்தில் உடன் நடித்த யோகி பாவுவை உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

சாய்ராம் பொறியியல் கல்லூரியில் விஜய்யின் பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.  கேரளா , மதுரை , தென்காசி , பொள்ளாச்சி என பல ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் வந்திருந்தனர்.  10 ஆயிரம் பேர் அமரக்கூடிய இருக்கைகள் அமைத்து 20 ஆயிரம் போலி டிக்கெட்டுகள் விற்றதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுங்கடங்காத கூட்டம் அலைமோதியது. காவல்துறையினர் தடியடி நடத்தி விஜய் ரசிகர்களை விரட்டி அடித்தனர்.

 

வெளியூரிகளில் இருந்து வந்த பலரும் ஏமாற்றுத்துடன் திரும்பினர். இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவும் விழாவில் பங்கேற்க வந்திருந்தார். ஆனால், கூட்டம் அலைமோதியதால் உள்ளே நுழைய விடாமல் அவரை காவல்துறையினரும் விழா ஏற்பாட்டாளர்களும் திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் அவரும் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றார். இத்தனைக்கும் யோகிபாபு பிகில் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிகில் விழாவில் பங்கேற்க முடியாததால் விஜய் ரசிகர்கள் பலரும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.