'இந்தியன் 2' படத்தில் சிம்புவின் அதிரடி கெட்டப்! வெளியான தகவல்!

https://static.asianetnews.com/images/authors/e065074c-8e18-5858-afb6-5be406a1a979.jpg
First Published 12, Jan 2019, 1:08 PM IST
indian2 movie simbu character leaked
Highlights

கமல்ஹாசன் நடித்து 1996 -ல் வெளியாகி வசூல் குவித்த 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் 'இந்தியன்-2 '  என்ற பெயரில் தற்போது தயாராகி வருகிறது.  இதில் கமலஹாசன் வயதானவராகவும் இளமையாகவும் இருவேடங்களில் நடிக்கிறார். ஷங்கர் டைரக்டு செய்கிறார். 
 

கமல்ஹாசன் நடித்து 1996 -ல் வெளியாகி வசூல் குவித்த 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் 'இந்தியன்-2 '  என்ற பெயரில் தற்போது தயாராகி வருகிறது.  இதில் கமலஹாசன் வயதானவராகவும் இளமையாகவும் இருவேடங்களில் நடிக்கிறார். ஷங்கர் டைரக்டு செய்கிறார். 

இதன் படப்பிடிப்பு, கடந்த மாதம் தொடங்க திட்டமிட்டு திடீரென தள்ளிவைக்கப்பட்டது. தற்போது பட வேலைகள் துவங்க தீவிரமாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தில், கமலஹாசனுக்கு இரண்டு கதாநாயகிகள் ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  இந்த படத்துக்காக வர்ம கலைகள் கற்று வருகிறார்.  இன்னொரு நாயகியாக நடிக்க தென்கொரிய நடிகை பே சூஸி யிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து இந்த படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், நடிக்க நடிகர் சிம்பு கமிட் ஆகியுள்ளார். ஏற்கனவே இது குறித்து சிம்பு கூறுகியில், ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் தான், வருவதாகவும், தனக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை மாற்ற வேண்டாம் என இயக்குனரிடம் கேட்டு கொண்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் சிம்பு இந்த படத்தில் நடிக்கும் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்தியன்-2 படத்தில் கமலின் பேரனாக சிம்பு நடிக்கிறாராம்.  முதல் பாகத்தில் சந்துரு கேரக்டரில் நடித்திருந்த கமலின் மகனாகவும், சேனாதிபதி கமலின் பேரனாக சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

loader