indian movie issue

‘பிரமாண்ட’ இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த 20 வருடங்களுக்கு முன் வெளியாகி மிகப் பெரிய ஹிட் ஆன திரைப்படம் இந்தியன்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க இருப்பதாக, பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100 வது நாள் விழாவில் தெரிவித்தார் கமல்ஹாசன். ஆனால் தற்போது இந்தியன்-2 படம் கைவிடப்பட்டு விட்டதாகவும், இந்தப் படத்தில் கமலஹாசன் நடிக்கவில்லை; அவருக்கு பதில் சூர்யா நடிக்க உள்ளதாகவும், இதனால் கதை மாற்றம் நடந்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவியது.

இந்தத் தகவலை அறிந்து, இயக்குனர் ஷங்கரின் தரப்பு கூறுகையில், தற்போது இயக்குனர் ஷங்கர் 2.0 வெளியீட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தின் வெளியீட்டிற்குப் பின் இந்தியன் படத்தை இயக்கத் தொடங்குவார். இந்தப் படத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிக்க இருப்பது உறுதி என்றும். வலைத்தளங்களில் உலவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளது.