சென்னையில் உள்ள EVP ஸ்டுடியோவில் மிக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, நடைபெற்று வந்த இந்தியன் 2 படப்பிடிப்பில், நேற்று இரவு 9 :30மணிக்கு  திடீர் என ஏற்பட்ட விபத்தில் சிக்கி, கிருஷ்ணா, மது, சந்திரன் ஆகிய மூவர் உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்து நடந்த போது, படப்பிடிப்பில் இருந்த நடிகர் கமல், காஜல் அகர்வால், மற்றும் இன்னும் சிலர் மயிரிழையில் உயிர் தப்பினர்.

கிரேன் விழுந்து காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தற்போது கிரேன் விழுந்து மரணமடைத்தவர்கள் பற்றியவர்களின் பெயரை தவிர மற்ற எந்த விவரங்களும் வெளியாகாத நிலையில் தற்போது அவர்களின் முழு விவரங்கள் மற்றும் புகைப்படம் உள்ளிட்டவை வெளியாகியுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்த, பிரபல கார்ட்டூனிஸ்டின் மருமகன் கிருஷ்ணா (34 ) என்பவர் உயிரிழந்துள்ளார். இவர் ஏற்கனவே ஷங்கரின் 2 .0 மற்றும் கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் ஆகிய படங்களில் பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.

இதே விபத்தில் சிக்கிய உயிரிழந்துள்ள மது என்பவர், ஆந்திராவை சேர்த்தவர் என்பது, 27 வயதாகும் இவர் பல தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் ஆர்ட் ஆசிஸ்ட்டாக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் புரொடக்ஷன் அஸிஸ்டட் சந்திரன், 54 வயதாகும் இவர்... பல வருடங்களாக தமிழ் திரையுலகில், பல தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இவர்கள் மூன்று திறமையானவர்களை இழந்து தவிப்பதாக கூறியுள்ளனர் படக்குழுவினர்.