கடைசியாக, எஸ்.ஜே.சூர்யா -பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்து வெளியான 'மான்ஸ்டர்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர், அவரது காட்டில் அடைமழைதான். 

ஜீவாவின் 'களத்தில் சந்திப்போம்', அருண் விஜய்யின் 'மாஃபியா', எஸ்.ஜே.சூர்யாவின் 'பொம்மை' என சுமார் அரை டஜன் படங்களை பிரியா பவானி சங்கர் கைவசம் வைத்துள்ளார். இதில், உலக நாயகன் கமல்ஹாசனின் 'இந்தியன்-2' படமும் ஒன்று என்பதுதான் சிறப்பு.பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்துவரும் இந்தப் படத்தின் ஷுட்டிங், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்தியன் தாத்தாவாக 90 வயது கெட்டப்பில் கமல்ஹாசன் நடிக்கிறார். அவரது தோழியாக 85 வயது கேரக்டரில் காஜல் அகர்வாலும், போலீஸ் அதிகாரியாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். அவர்களுடன் சித்தார்த், வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர்  என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்களை 'இந்தியன்-2' படத்துக்காக இணைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்த நிலையில், இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் எந்த மாதிரியான கேரக்டரில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 'இந்தியன்' முதல் பாகத்தில் சேனாதிபதியின் மனைவியாக சுகன்யா நடித்திருந்தார் அல்லவா! தற்போது அவரது வேடத்தில் தான் பிரியா பவானி சங்கர் நடிக்க இருக்கிறாராம். 

இந்த தகவல், பிரியா பவானி சங்கரின் ரசிகர்களுக்கு சர்ப்ரைசாக அமைந்துள்ளது.இதனிடையே, 'இந்தியன்-2' படத்தின் சில காட்சிகளில் கமல்ஹாசன் குஜராத்தி மொழி பேசி நடிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

சில காட்சிகள் என்றாலும் அதற்காக குஜராத்தி மொழியையும் ஓரளவு பேச பயிற்சி எடுத்தே அந்த காட்சிகளில் கமல் நடித்து வருகிறாராம். இப்படி, 'இந்தியன்-2' படம் குறித்து அடுத்தடுத்து வரும் அப்டேட்கள், ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.