'இந்தியன் 2 ' திரைப்படத்தின், படப்பிடிப்பு கடந்த ஆண்டே துவங்கப்பட்டு முதல் கட்ட படப்பிடிப்பு மட்டும் நிறைவடைந்த நிலையில், இந்த படம் கிடப்பில் போடப்பட்டது. நடிகர் கமல்ஹாசனும் அரசியல், மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய கவனத்தை தற்போது செலுத்தி வருகிறார்.

இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. நடிகை காஜல் அகர்வால், கமலுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்து வருவதும் ஏற்கனவே நாம் அறிந்தது தான்.

இந்நிலையில் தற்போது படக்குழுவினரிடம் இருந்து போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் 'இந்தியன் 2 ' படத்தில் நடிக்க, விருப்பம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் உள்ள நடிகர்கள் துணை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களின் முழு விவரத்தையும் அனுப்புமாறு அதில் அவர்களுடைய இணையதள முகவரியையும் கூறியுள்ளனர்.

இதனால், கமல் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என நினைத்த நடிகர்களுக்கு மட்டும் இன்றி, சினிமாவில் நடிக்க வேண்டும் என நினைத்தவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைத்துள்ளது.