தெலுங்கு படத்தில் பிஸியாக இருக்கும் இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 விவகாரத்தை கவனிக்க வேறொருவரை நியமித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இந்தியன் 2 பட பிரச்சனை தொடர்பாக லைகா நிறுவனமும் சங்கரும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க சங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. 

இதற்கிடையே ஷங்கர் தனது அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார். தற்போது தெலுங்கில் ராம்சரணை நாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமாக இயக்கி வருகிறார். அந்தப் படத்தில் கவனம் செலுத்தி வருவதால் இந்தியன்2 விவகாரத்தை கவனிக்க தற்போது புதிய நபரை நியமித்து உள்ளாராம். ‘இனி இந்தியன்2 தொடர்பாக எந்த விவகாரம் வந்தாலும் நீங்களே சமாளித்து கொள்ளுங்கள்’ என அவரிடம் கூறியுள்ளாராம். ‘ஏதேனும் சந்தேகம் இருந்தால் மட்டும் என்னை தொடர்பு கொள்ளவும்’ என திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம்.