தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ‘இந்தியன் 2’வில் நடிக்க ஆர்வம் காட்டாமல் கமல் ‘தேவர் மகன் 2’வை ஆரம்பித்தாலும் கூட அமீர் கான் அல்லது ஷாருக் கான் போன்ற மெகா ஸ்டார்கள் யாரையாவது வைத்து இந்தியில் அப்படத்தை இயக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறாராம் இயக்குநர் ஷங்கர்.

சோதனை மேல் சோதனையைச் சந்தித்த ‘இந்தியன் 2’ படத்தை முழுசாக லைகா நிறுவனம் கைவிட்டுள்ள நிலையில், கமல் ‘இ 2’வை விட தேவர் மகன்2’வில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் இயக்குநர் ஷங்கர், அக்கதையைக் கிடப்பில் போட்டுவிட்டு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றை இயக்கவிருப்பதாக செய்திகள் நடமாடின.

ஆனால் அச்செய்தியை ஷங்கருக்கு நெருங்கிய வட்டாரங்கள் மறுக்கின்றன. ஒருவேளை கமலே நடிக்க முன்வராவிட்டாலும் தனது அடுத்த படம் ‘இந்தியன் 2’ தான் என்பதில் ஷங்கர் உறுதியாக இருக்கிறார். கமல் நடிக்க முன்வந்தால் அது தமிழ்ப் படமாகவும் இல்லாவிட்டால் நேரடி இந்திப்படமாகவும் இயக்க ஷங்கர் திட்டமிட்டிருக்கிறாராம்.

தயாரிப்பாளரைப் பொறுத்தவரை இப்போதைக்கு ஷங்கரின் தொடர்பில் இருப்பவர்கள் சன் பிக்‌ஷர்ஸும், மும்பையைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனமும்தான். இரு நிறுவனங்களுக்குமே ‘இந்தியன்2’வின் ஸ்டோரி போர்டையும் பட்ஜெட் விபரங்களையும் ஒரு புத்தமாக ரெடி செய்து இரு நிறுவனங்களுக்கும் அனுப்பி வைத்துவிட்டு பதிலுக்காக காத்திருக்கிறாராம் ஷங்கர்.